Thursday, 21 September 2017

பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?

LINK: http://www.bbc.com/tamil/india-41348078

திருச்சியில் செய்தி சேகரிக்க சென்ற சமயத்தில் காவிரி புஷ்கரம் விழா பற்றி தெரியவந்தது. நேரில் சென்று பாப்போம் என்று போனால், அங்கே வேறு ஒரு கதை இருந்தது..
காவிரிதாயிடம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறாள், பசியோடு இருக்கும் விவசாய நிலங்களுக்கு சொட்டுநீர் பாசனம் கொடுக்க வழியில்லாமல் சிரமத்தில் அவள் இருகிறாள்...
ஆனால் புஷ்கரம் விழாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு மக்கள் தங்களின் பாவத்தை போக்குவதற்கு விழா பேஷாக நடக்கிறது என்று பேசிகொண்ட விவசாயிகளின் கவலை என்னை பாதித்தது..
ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் இதுபற்றி பேச தயராக இல்லை...
 ஒரு செய்தி எழுதி இதை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்போம் என்று எண்ணி இந்த செய்தியை வெளியிட்டேன்...

Thursday, 10 August 2017

Chennai reports

This time I had visited the government yoga and naturopathy medical college to know color theraphy.. 
It was fascinating... I had interviewed people who had stayed there and cured themselves with the help of nature... 

வண்ணங்களை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை
http://www.bbc.com/tamil/science-40863422The second stop was to Koyambedu bus depot during the breastfeeding week. I was disturbed when I heard experiences of women facing abuses when they feed their children. When will we grow as civilised society???

பொதுவெளியில் பாலூட்டும் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

http://www.bbc.com/tamil/india-40843683

Friday, 21 July 2017ரோஹிஞ்சாக்கள்..


LINK:  http://www.bbc.com/tamil/india-40688019


பெரும்பான்மை பௌத்த மதத்தினர் ரோஹிஞ்சா இஸ்லாமியர்களை விரட்டுகின்றனர் என்பதால் சுதந்திரத்தை தேடி சென்னையை வந்துசேர்ந்ததாக கூறுகிறார்கள் இவர்கள்.....


அகதியாக வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமானது.. தன்னுடைய நிலத்தை விட்டு, வேறு இடத்தில் தெரியாத மக்களின் அன்பை, ஆதரவை தேடும் அந்த வாழ்க்கை... தினமும் தளும்புகள் விழுவது போன்ற அனுபவம்..

இவர்களின் கதைகள் சுதந்திரத்தின் விலை என்ன என்பதை உணர்த்தியது...
எந்த கவலையும் இல்லாமல் சென்னைவாசியாக மாறிப்போன
ரோஹிஞ்சா குழந்தைகள் மட்டுமே மகிழ்ச்சியுடன், கொண்டாடத்துடன் காணப்படுகிறார்கள்....

சமீபத்தில் காலமான ஓவியர் வீர.சந்தனத்தின் வரிகளை பத்திரிகையில் படித்தேன்... ஈழப் போரின்போது அவர்எழுதியது...

காந்தி தேசம் துப்பாக்கி கொடுத்தது
புத்ததேசம் கொன்று குவித்தது..

...புத்தன், காந்தி இயேசு பிறந்தது பூமியில் எதற்காக? தோழா ஏழைநமக்காக.... வாலியின் பாட்டைக் கேட்டுவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கபோய்விடுகிறோம்?


Tuesday, 2 May 2017

ஓய்வறியா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்


http://www.bbc.com/tamil/global-39731846


ஓய்வில்லாமல் உழைக்கும் ஜப்பானின் மற்றொரு பக்கமாக, சில ஜப்பானியர்களின் மரணத்திற்கு காரணமே அவர்கள் அதிகமாக உழைப்பதுதான் என்று தெரியவந்துள்ளது.


I was shocked when I learnt some japanese workers die because of overwork and even some deaths were recognised by the government. But I was happy that Japan government had courage to come out with white paper report on deaths due to overwork. 

Hope this story will inform Tamil readers on working conditions in Japan and how Tamils who live in Japan struggle in the market. 


Monday, 20 February 2017

JASON MRAZ


Shine https://www.youtube.com/watch?v=Zkov1CS36po

The world around me, bunch of people breaking their heads with  politics in different states of India and a little group discussing at length on offensive launched on the West Mosul and what not.

When I get too much into news, I tell myself its time to listen to JASON MRAZ...

Friday, 3 February 2017

வரதட்சணையை ஊக்குவிக்கிறதா பள்ளி புத்தகம் ?மஹாராஷ்டிராவில் அரசு வழங்கியுள்ள சமூகவியல் பட புத்தகத்தில் அழகில்லாத பெண்கள் மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் அதிக வரதட்சணை தரவேண்டியுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது. 

கல்யாணம் என்ற சடங்கின் தன்மை தற்போது மாறி வரும் வேளையில் அரசு வெளியிடும் ஒரு புத்தகத்தில் இது போல வெளியிட்டுள்ளது மிகவும் அவமானகரமானது. 

கல்வி அமைச்சர் தற்போது அந்த கருத்தை திருத்த உத்தரவிட்டுள்ளார். 
சரி அந்த புத்தகத்தை எழுதிய அறிவு ஜீவிகள் யார் யார் ?? 

Wednesday, 25 January 2017

சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டிசென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கோரி போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முற்பட்ட போது வெடித்த வன்முறைக்கு, அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

http://www.bbc.com/tamil/media-38730714